Go to ...

RSS Feed

சிறுவாணி குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டுயானைகள் : குடிநீர் பகிர்மான குழாய்களை சேதப்படுத்தியது

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 863.40 மீட்டர் உயரத்தில் சிறுவாணி அணை உள்ளது. நடப்பு தென்மேற்கு பருவமழைக்காலத்தில் சிறுவாணி அணையில் தொடர்ச்சியாக மழை பெய்தது. அதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து சுமார் நான்கு நாட்கள் நிரம்பி வழிந்தது. கடந்த இரு வாரங்களில் மட்டும் மூன்று முறை சிறுவாணி பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. தற்போது, கடந்த மூன்று நாட்களாக சிறுவாணி சாலை, சாடிவயலை தாண்டி வெள்ளையம்பதி அருகேயுள்ள சுத்திகரிப்பு நிலைய பகுதி,

செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து 50,000 கனஅடி நீர் வெளியேற்றம்

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து தற்போது 50,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை அதன் முழுகொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து, வெளியேற்றப்படும் நீரின் அளவை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 10,000 கனஅடி உயர்த்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். Source: Dinakaran

120 அடியை எட்டியது மேட்டூர் அணை: 5 ஆண்டுகளுக்கு பின்னர் முழுக் கொள்ளளவு நிரம்பியது

மேட்டூர் அணை முழுக்கொள்ளளவான 120 அடியை 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது எட்டியுள்ளது. கடந்த 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி கட்டிமுடிக்கப்பட்ட மேட்டூர் அணையானது 39-வது முறையாக முழுக்கொள்ளளவான 120 அடியை தற்போது எட்டியுள்ளது. அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியில் இருந்து திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் 40,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 70,000 கனஅடியாக இருக்கும் நிலையில், இன்றிரவுக்குள்

முதல்வர் மீது ரூ. 3,120 கோடி ஊழல் புகார்: ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் மனு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் பதவியை பயன்படுத்தி தன் சம்பந்தி உட்பட உறவினர்கள் பலருக்கு 3,120 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பான ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் புகார் மனு அளித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்

மஹாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணி முறிந்தது? – 2019 தேர்தலைத் தனியாக சந்திக்க அமித் ஷா அழைப்பு

2019-ம் ஆண்டு மஹாராஷ்ராவில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையும், மக்களவைத் தேர்தலையும் தனியாகச் சந்திக்க தயாராகுங்கள். அதற்கான களப்பணியில் தீவிரமாக ஈடுபடுங்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கட்சித் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசிலும், மஹாராஷ்டிரா மாநிலத்திலும், உரசலில் இருந்த பாஜக, சிவசேனா கட்சியின் கூட்டணி நட்பு ஏறக்குறைய முறிந்துவிட்ட சூழலுக்கு வந்துவிட்டது. அமித் ஷா பயணம் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது குறித்து பாஜக

அதிமுகவே முடங்கியிருந்தபோது கட்சி தாவல் எப்படி பொருந்தும்? தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் வாதம்

For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts சென்னை: அதிமுகவே முடக்கி வைக்கப்பட்டிருந்தபோது கட்சி தாவல் தடை சட்டம் எப்படி பொருந்தும் என்று டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அவர்கள் தரப்பு தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிநீதி மன்றம் விசாரணை நடத்தியது.

View More ››
சினிமா

1960ல் நடந்த நிஜ சம்பவம் படமாகிறது

7/23/2018 12:43:43 PM 1960 மற்றும் 1980களில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிறது ‘கங்கு’. நகுல் நடித்த பிரம்மா டாட் காம் படத்தை இயக்கிய புருஷ் விஜயகுமார் இயக்குகிறார். படம்பற்றி அவர் கூறும்போது,’பழிக்குபழி சம்பவங்களை மையமாக கொண்ட படங்கள் நிறைய வந்திருக்கின்றன. ஆனால் அதைவிடவும் நிஜத்தில் நடக்கும் பழிக்குபழி சம்பவங்கள் யாரும் எதிர்பாராதவைகளாக அமைகிறது. 1960, 1980களில் நடந்த இதுபோன்ற சம்பவத்தின் உண்மைகள் மறைக்கப்பட்டன. அதை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகிறது. சம்பவம் நடந்த

தணிக்கையில் போராடிய படக்குழு

7/23/2018 12:20:15 PM திரைப்படம் எடுப்பது எளிது. ஆனால் அதை தணிக்கை செய்து வெளியிடுவது கடினம் என அடிக்கடி திரையுலகினர் கருத்து தெரிவிக்கின்றனர். அப்படியொரு கடின அனுபவம் ‘சகா’ பட குழுவினருக்கு ஏற்பட்டது. இதுபற்றி பட இயக்குனர் முருகேஷ் கூறியது: சிறிய தவறுக்காக நண்பர்கள் இருவர் ஜெயிலுக்கு செல்கின்றனர். அங்குள்ள ஒரு ரவுடி, நண்பர்களில் ஒருவனை கொலைசெய்துவிட்டு தப்பிக்கிறான். அவனை பழிவாங்க மற்றொரு நண்பன் முடிவு செய்கிறான். அவனுடன் புதிய நண்பன் ஒருவனும் கூட்டு சேர்ந்துகொள்கிறான். இவர்களின்

தோசைக்கல்லை வீசி இயக்குநரின் நெற்றியை தாக்கிய அஞ்சலி

ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லிசா’. இப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெர்று வருகிறது. இதில் கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். அவர் தோசைக் கல்லை தூக்கி எறிந்து இயக்குநரின் நெற்றியை காயப்படுத்தியிருக்கிறார். அஞ்சலி தற்போது ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் ‘லிசா’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். பிரபல ஒளிப்பதிவாளரும், ‘மதுரை வீரன்’ படத்தின் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் இந்த படம் 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகிறது. இந்த

View More ››
தமிழகம்

தாது மணல் கொள்ளை குறித்து நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் ஆய்வு

நெல்லை : நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கடந்த 2013ம் ஆண்டு தாது மணல் ஏற்றுமதி செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தமிழக அரசு அப்போதைய வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப் சிங் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இவர்கள் 15 குழுக்களாக பிரிந்து நெல்லை, தூத்துக்கடி, குமரி, திருச்சி, மதுரை உள்பட 72 குவாரிகளில் ஆய்வு செய்து ஆய்வறிக்கையை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தனர். எனினும் அந்த ஆய்வறிக்கையில் என்னென்ன கூறப்பட்டிருந்தது என்பது குறித்த

ஆலங்குடி பகுதியில் கோலாகல துவக்கம் : கோடிகள் புழங்கும் மொய்விருந்து விழா

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களிலும், அதேபோல் தஞ்சை  மாவட்ட எல்லை கிராமங்களில் ஆடியில் நடைபெறும் வினோத மொய்விருந்து விழாக்கள் மூலம் இந்த ஆண்டு 500 கோடிக்கு மேல் பணபரிமாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்வில் பின்தங்கியுள்ள ஒரு குடும்பத்தின் வறுமையை போக்க, குடும்ப தலைவரை, விருந்து வைக்க சொல்லி சாப்பிட்டு திருமண விழாக்களைப்போல்,  மொய் பணம் கொடுப்பதே மொய் விருந்தாகும். அந்த தொகையை கொண்டு விவசாயம் அல்லது தொழில் செய்து ஏழ்மை நிலையில் உள்ள

போடியில் பலத்த சூறைக்காற்று : 50 வீடுகளின் மேற்கூரை, 10 மின்கம்பங்கள் சேதம்

போடி: பலத்த சூறைக்காற்று வீசியதில் போடி அருகே 50 வீடுகளின் மேற்கூரைகள், 10 மின்கம்பங்கள் சேதமடைந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆடி மாதம் பிறப்பதற்கு முன்பே காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது பல இடங்களில் சூறைக்காற்று வீசி வருகிறது. தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தென்னை, வாழை மரங்கள் ஒடிந்து சேதமானது.

3 ஆண்டுகளுக்குப்பின் ஆழியார் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை 118 அடியை எட்டியதையடுத்து 3 ஆண்டுக்கு பின் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 120அடி உயரம் கொண்ட ஆழியார் அணை உள்ளது. பிஏபி தொகுப்பு அணைகளில் ஒன்றான இதிலிருந்து பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை போதிய மழையில்லாததால், ஆழியார் அணைக்கு மிகவும் குறைந்த அளவு தண்ணீரே வந்து கொண்டிருந்தது. கடந்த மாதம் துவக்கத்தில் அணையின் நீர்மட்டம் சுமார்

தா.பழூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு : காளைகள் முட்டி 27 பேர் காயம்

தா.பழூர்: தா.பழூர் அருகே காசாங்கோட்டையில் தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 27 பேர் காயமடைந்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த காசாங்கோட்டை கிராமத்தில்  ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர் ஆனால் போதிய பாதுகாப்பு அம்சம் இல்லை எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி நேற்று காசாங்கோட்டை கிராமத்தில் ஊர் நடுவே வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் ஊர்  கோயில் காளையை முதலில் அவிழ்த்து

View More ››