Go to ...

RSS Feed

பாக்தாத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 28 பேர் பலி


இராக் தலைநகர் பாக்தாத்தில், மக்கள் கூட்டமிகுந்த சந்தைப்பகுதி ஒன்றில் நடைபெற்ற இரு குண்டு வெடிப்புகளில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சினாக் பகுதியிலிருந்த கடைகளை இந்த வெடிப்பு சேதப்படுத்திய நிலையில், மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒரு கார் உதிரிபாகங்கள் விற்கும் கடை அருகே சாலையோரத்தில் இருந்த குண்டு ஒன்று வெடித்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து, அங்கு கூடியிருந்த கூட்டத்தினரிடையே இருந்த தற்கொலை குண்டுதாரி ஒருவர் தன்னைத்தானே வெடிக்க வைத்துள்ளார்.

தனது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளில் இருவர் தற்கொலை ஆடைகளை அணிந்து தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ் குழு தெரிவித்துள்ளது.

இராக் ராணுவம் வட நகரமான மொசூல் நகரை நோக்கி முன்னேறி வரும் நிலையில், தலைநகர் பாக்தாத்தில் சமீப மாதங்களில் ஐ.எஸ் குழு தினமும் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ் குழுவின் இறுதி பெரிய கோட்டையாக மொசூல் கருதப்படுகிறது.

Source: BBC.com