Go to ...
RSS Feed

வாரத்துக்கு 3 முறை சர்ச் செல்லும் சமந்தா


வாரத்துக்கு 3 முறை சர்ச் செல்லும் சமந்தா

1/17/2018 2:05:51 PM

கடந்த ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை மணந்தார் நடிகை சமந்தா. இவர்கள் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவம் என இருமத முறைப்படி நடந்தது. சமந்தாவை பொருத்தவரை சென்னையில் இருந்தவரை இங்குள்ள சர்ச்சுக்கு சென்று வழிபடுவார். தற்போது கணவருடன் ஐதராபாத்தில் வசிக்கிறார். அங்கும் சர்ச் செல்வதற்கு தவறுவதில்லை. டிரைமுல்கஹர்ரி பகுதியில் உள்ள செய்ன்ட் சர்ச்சுக்கு வாரத்தில் 3 நாள் சென்று வழிபடுகிறார். இதனை தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்திருக்கும் சமந்தா, சர்ச் படிகளில் நின்றிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். தனது தாய் தன்னை சிறுவயதில் சர்ச்சுக்கு அழைத்து சென்றது குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்.அதில்,‘வாரத்தில் புதன், சனி மற்றும் ஞாயிறு என 3 நாட்கள் என்னை எனது அம்மா சர்ச்சுக்கு இழுத்துச் சென்றுவிடுவார். அப்போது எனக்கு கோபம் கோபமாக வரும். ஆனால் அவரது பிரார்த்தனைதான் என்னை இப்போது காப்பாற்றுகிறது. வியப்புக்குரியவர் என் அம்மா’ என சமந்தா குறிப்பிட்டிருக்கிறார். நாக சைதன்யா குடும்பத்தினர் இந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தபோதும் சமந்தாவின் மத உணர்வுக்கு மதிப்பளிக்கக்கூடியவர்களாக இருப்பதால் அவர்களின் மத சடங்குகளிலும் சமந்தா பங்கேற்க தவறுவதில்லை.

Source: Dinakaran

English summary
Go to Samantha Church 3 times a week

1/17/2018 2:05:51 PM last year, he was married to actress actor Naga Chaitanya, Samantha. Their wedding as Hindu and Christian compassion

Facebook Comments