Go to ...
RSS Feed

நெருக்கமான காட்சிகளில் நடிக்க மறுக்கும் நயன்தாரா


நெருக்கமான காட்சிகளில் நடிக்க மறுக்கும் நயன்தாரா

1/17/2018 2:20:23 PM

முன்னணி ஹீரோக்கள் படங்கள் என்றாலும் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே சமீபகாலமாக நடிக்க ஒப்புக்கொள்கிறார் நயன்தாரா. பெரும்பாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளையே தேர்வு செய்கிறார். அவரை பிரதானமாக வைத்து உருவான ‘அறம்’ படம் சமீபத்தில் வந்து வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் புதுகண்டிஷன்கள் போடத் தொடங்கியிருக்கிறாராம். கடந்த ஆண்டு 4 படங்கள் நயன்தாரா நடிப்பில் திரைக்கு வந்திருந்தாலும் அதில் 3 படங்கள் ஹீரோயின் முக்கியத்துவமுள்ள படங்கள். ஒரு படம்தான் ஹீரோ சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் நயன்தாரா அங்கும் இதேபோன்ற கண்டிஷன்கள் விதிக்கிறார். சமீபத்தில் என்.டி.பாலகிருஷ்ணாவுடன் இணைந்து ஜெய் சிம்ஹா படத்தில் நடித்திருந்தார். இப்படத்துக்காக அதிகபட்ச சம்பளம் நயன்தாராவுக்கு தரப்பட்டது. அதேசமயம் படத்தில் காதல் காட்சிகள் இருந்தாலும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டார். அதை இயக்குனர் ஏற்றுக்கொண்டார். தவிர பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன், படம்பற்றி பேட்டி அளிக்க மாட்டேன் என்ற கண்டிஷன்களும் முதலிலேயே தெரிவித்து விடுகிறார்.

Source: Dinakaran

English summary
Refuse to act in the intimate scenes nayantara

1/17/2018 2:20:23 PM front heroes pictures, although his importance lately agreed to act only if

Facebook Comments