Go to ...
RSS Feed

கேட் ஏறிக் குதித்து எஸ்கேப் ஆன சூர்யா


ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட நடிகர் சூர்யா, கேட் ஏறிக் குதித்து எஸ்கேப் ஆகியிருக்கிறார். #ThaanaaSernthaKoottam

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட நடிகர் சூர்யா, கேட் ஏறிக் குதித்து எஸ்கேப் ஆகியிருக்கிறார். #ThaanaaSernthaKoottam

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்தாருடன் கொண்டாடாமல் ஆந்திராவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆந்திராவில் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள மேனகா தியேட்டருக்கு சென்றிருக்கிறார் சூர்யா. தியேட்டர் நிர்வாகமே எதிர்பாராத அளவிற்கு அங்கு கட்டுக்கு அடங்கா கூட்டம் கூடிவிட்டது.

image

ரசிகர்களின் கூட்டம் அதிகமானதால் வேறு வழியில்லாமல் சூர்யா தியேட்டரின் பின்பக்கம் உள்ள கேட்டில் ஏறிக் குதித்து சென்றுள்ளார். சாதாரண நபர் போன்று சூர்யா கேட்டில் ஏறிக் குதித்த வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

Source: Malai Malar

English summary
That a cat had climbed SK Surya

The State of Andhra Pradesh in Rajahmundry fans stuck in actor Surya, jumped the cat climbed the SK

Facebook Comments