Go to ...

RSS Feed

ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பில் அஜீத்?


ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பில் அஜீத்?

3/14/2018 5:09:56 PM

சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார் அஜீத்குமார். இதையடுத்து ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் அஜீத் நடிப்பார் என்று தகவல்கள் உலா வருகிறது. ஸ்ரீதேவியுடன் அஜீத்குமார் நல்ல புரிதல் வைத்திருந்தார். அவர் நடித்த ‘இங்லிஷ் விங்லிஷ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் அஜீத் நடித்தார். துபாயில் குளியல் தொட்டியில் விழுந்து இறந்த ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் அவரது உருவபடத்துக்கு பலர் அஞ்சலி செலுத்தினர். சில தினங்களுக்கு முன் தனது மனைவி ஷாலினியுடன் அந்த வீட்டுக்கு நேரில் சென்று ஸ்ரீதேவி படத்துக்கு அஞ்சலி செலுத்தினார் அஜீத். இந்தநிலையில்தான் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் அஜீத் நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. கார்த்தி நடித்த ‘தீரன்’ படத்தை இயக்கிய வி.வினோத்திடம் புதிய படத்தை இயக்கும் பொறுப்பை அஜீத் தரவிருக்கிறாராம்.

Source: Dinakaran

English summary
Sridevi husband Ajit product?

3/14/2018 5:09:56 PM Siva ‘ loyalty ‘ acting in the film ajeethkumar. Sridevi husband knifed bonik

Facebook Comments