Go to ...

RSS Feed

சச்சினுக்கு ஏற்பட்ட விபரீத ஆசை: ஆரவாரத்தில் ரசிகர்கள்!!


கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகி வருகிறது. இதில் சச்சின் தெண்டுல்கரே அவரது கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த படத்துக்கு ‘சச்சின்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். ஜேம்ஸ் எர்ச்கின் டைரக்டு செய்கிறார், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 
 

சச்சின் சிறுவயது வாழ்க்கை, உலக போட்டிகளில் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தும் படத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீடியோ பதிவுகளையும் அப்படியே படத்தில் பயன்படுத்துகின்றனர். 
 

படப்பிடிப்பு மும்பை பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். 1,000 திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்படுகிறது. 
 

இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

செய்திகள்

Source: Webdunia.com