Go to ...
RSS Feed

சந்தோஷ் நாராயணனை நெகிழ வைத்த விஜய்


தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வரும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு, நடிகர் விஜய் சிறப்பு பரிசளித்து அவரை நெகிழ வைத்திருக்கிறார். #Vijay #SanthoshNarayanan

அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். பா.இரஞ்சித் இயக்கிய இப்படம் ரசிகளிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார் சந்தோஷ் நாராயணன்.

பின்னர் விஜய் நடித்த ‘பைரவா’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இதில் ‘வரலாம் வரலாம் வா…’, ‘நில்லாயோ…’, ‘பாப்பா’ ஆகிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. தற்போது ‘காலா’, ‘பரியேறும் பெருமாள்’  உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும், ரசிகர்களும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் விஜய், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்து வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணுக்காக பிரத்யேகமாக ஒரு பேட் ஒன்றை உருவாக்கி அதில், SaNa Happy Birthday Nanba என்று பதிவு செய்து அன்புடன் விஜய் என்று கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார்.

இந்த பரிசு என் வாழ்க்கையில் மறக்க முடியாது என்றும், சிறப்பு பரிசு அளித்த விஜய் அண்ணாவுக்கு நன்றி என்றும் சந்தோஷ் நாராயணன் கூறியிருக்கிறார். 

Source: Malai Malar

English summary
Santosh Narayanan set to floppy, Vijay

To commemorate his birthday has been Music Director Santosh Narayanan, presented him with a special actor Vijay

Facebook Comments