Go to ...

RSS Feed

தமிழ் கற்கும் மல்லுவுட் நடிகை


தமிழ் கற்கும் மல்லுவுட் நடிகை

6/14/2018 12:21:28 PM

மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வரும் கதாநாயகிகள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த வரிசையில் ‘குத்தூசி’ படத்தில் அறிமுகமாகிறார் மல்லுவுட் நடிகை அமலா. இயற்கை விவசாயம் சார்ந்த படமாக உருவாகும் இதில் திலீபன் கதாநாயகன். யோகிபாபு, முனிஷ் நடிக்கின்றனர். சிவசக்தி இயக்கம். எம்.தியாகராஜன் தயாரிப்பு. இதன் ஒலிநாடாவை இயக்குனர் சீனுராமசாமி வெளியிட்டு பேசினார்.

அமலா பேசியது, ‘இப்படத்தில் நடிக்க வரும்போது தமிழில் ஒரு வார்த்தைகூட எனக்கு தெரியாது. ஆனால் தமிழ் பேச எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த ஆர்வத்தில் தமிழ் கற்கத் தொடங்கினேன். இப்போது ஓரளவுக்கு பேச பழகிவிட்டேன். விரைவில் சரளமாக பேசுவேன்.

இந்த நிகழ்ச்சியில்கூட நான் தமிழில் பேசுவதற்கு காரணம் அந்த பழக்கத்தை தொடர்வதற்காகத்தான். பேச்சில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக இப்படத்தில் நடித்திருக்கிறேன்’ என்றார். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Source: Dinakaran