Go to ...

RSS Feed

கவர்ச்சி நடிகைக்கு மிரட்டல்


கவர்ச்சி நடிகைக்கு மிரட்டல்

6/14/2018 12:36:17 PM

சினேகிதியே, சந்தித்த வேளை, நான் அவன் இல்லை 2, அரவாண் போன்ற படங்களில் நடித்திருப்பவர் கவர்ச்சி கதாநாயகி சுவேதா மேனன். மலையாளத்திலும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் இவருக்கு தொலைபேசியில் மர்ம நபர் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து மும்பை மற்றும் கேரளா போலீசில் புகார் அளித்தார்.

இதுபற்றி சுவேதா மேனன் கூறியதாவது: நான் தற்போது மும்பையில் இருக்கிறேன். மலை யாள திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ‘உங்களை சங்க செயற்குழு உறுப்பினராக நியமிக்க உள்ளோம்’ என்றார். அது எனக்கு கிடைத்த கவுரவம் என்று சொல்லி ஏற்றுக்கொண்டேன்.

பின்னர் மர்ம நபர் யாரோ ஒருவர் எனக்கு போன் செய்து மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசினார். போனில் என்னை மிரட்டியது யார் என்பது தெரியவில்லை. சங்க செயற்குழு உறுப்பினராக நான் நியமிக்கப்பட்டதை பிடிக்காத யாரோ ஒருவர்தான் மிரட்டி இருக்கிறார் என தெரிகிறது. இதுகுறித்து மும்பை, கேரளா போலீசில் புகார் அளித்துள்ளேன்’ என்றார்.

Source: Dinakaran

Facebook Comments