Go to ...

RSS Feed

திரைப்பட துறையில் நல்ல நண்பர்கள் கிடைப்பது கஷ்டம் – அனிருத்


திரைப்பட துறையில் நல்ல நண்பர்கள் கிடைப்பது கஷ்டம் - அனிருத்

6/14/2018 3:03:51 PM

இயக்குனர் வெங்கட் பிரபு தயாரித்துள்ள படம், ஆர்.கே.நகர். அவரது உதவியாளரும், வடகறி  பட இயக்குனருமான சரவண ராஜன் இயக்கியுள்ளார். வைபவ், சனா அல்தாப், அஞ்சனா  கீர்த்தி, சம்பத் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசை அமைத்துள்ளார். படத்தின் விளம்பரத்தை வெளியிட்ட இசை அமைப்பாளர் அனிருத், பேசியதாவது:

மதியான வேளையில் ஒரு விழாவுக்கு வருவதெல்லாம் எனக்குப் பழக்கம் இல்லை. இது எனக்கான நேரம் கிடையாது. இந்த விழாவுக்கு பல பேருடைய தீவிர ரசிகனாக வந்திருக்கிறேன். வைபவ் நடித்த மேயாத மான் படத்தை இதுவரை 10 முறை பார்த்திருக்கிறேன். அவரது நகைச்சுவை டைமிங் பற்றி  என் நண்பர்களிடம் சொல்லி ரசித்திருக்கிறேன்.

விரைவில் நானும், வெங்கட்பிரபுவும் இணைந்து பணிபுரிவோம். திரைப்பட துறையில் நல்ல நண்பர்கள் கிடைப்பது ரொம்ப கஷ்டம். வெங்கட் பிரபு அதிக நண்பர்களை வைத்திருக்கிறார். அடிக்கடி என் நண்பர்களிடம், இருந்தால் வெங்கட் பிரபுவின் நண்பர்கள் பட்டாளத்தை போல்  இருக்க வேண்டும் என்று பெருமையாகச் சொல்வேன்.

Source: Dinakaran

Facebook Comments