Go to ...

RSS Feed

படம் பார்த்தே இயக்குனரான கதாநாயகன்


படம் பார்த்தே இயக்குனரான கதாநாயகன்

6/14/2018 3:16:21 PM

மு.ரா.சத்யா எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம், என்னோடு நீ இருந்தால். மானசா நாயர் கதாநாயகி. ‘ரொமான்டிக் திரில்லராக படம் உருவாகியுள்ளது. யாரிடமும் நான் உதவியாளராகப் பணியாற்றியது இல்லை. திரைப்பட படங்களைப் பார்த்தும், பல புத்தகங்களைப் படித்தும் ஏற்பட்ட அனுபவத்தை வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்.

நாம் அனைவரும் ஒரு முக்கியமான விஷயத்தால் நமக்குத் தெரியாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். அந்த பாதிப்பு என்ன? ஏன் அவ்வாறு நடக்கிறது என்பது கதை. யு சான்றிதழ் கிடைத்துள்ளது. நாளை படம் ரிலீசாகிறது’ என்றார் சத்யா.

Source: Dinakaran

Facebook Comments