Go to ...

RSS Feed

படத்தை அறிவித்த டைரக்டர் : மறுத்த கதாநாயகன்


படத்தை அறிவித்த டைரக்டர் : மறுத்த கதாநாயகன்

6/14/2018 3:43:30 PM

நீண்ட இடைவெளிக்கு பிறகு நாகார்ஜுனா, இயக்குனர் ராம் கோபால் வர்மா இணைந்த தெலுங்கு படம் ஆபீசர். சமீபத்தில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீசில் ஓடவில்லை. இந்நிலையில் டிவிட்டரில் நாகார்ஜுனாவுடன் இணைந்து மீண்டும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என குறிப்பிட்ட ராம்கோபால் வர்மா, அடுத்த படத்தில் அவரது மகன் அகில் அகினேனியுடன் இணைகிறேன். நாகார்ஜுனா இந்த படத்தை தயாரிக்கிறார் என தகவல் வெளியிட்டார்.

இதை படித்ததுமே அகில் அலற ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே ஆபீசர் படம் மூலம் அப்பா நாகார்ஜுனாவுக்கு தோல்வியை கொடுத்திருக்கிறார் வர்மா. படத்தை விமர்சகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் வர்மா படத்தில் நான் நடிப்பதா என அகில் கோபமடைந்துள்ளார். உடனே தனது டிவிட்டர் பக்கத்தில் வர்மா படத்தில் நான் நடிக்கவில்லை என மறுத்துள்ளார். இப்போது ராம்கோபால் வர்மாவை இணையப் பயனாளர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Source: Dinakaran