Go to ...

RSS Feed

நஸ்ரியா ரீஎன்ட்ரிக்கு உறுதி வாங்கிய இயக்குனர்


நஸ்ரியா ரீஎன்ட்ரிக்கு உறுதி வாங்கிய இயக்குனர்

6/14/2018 4:50:19 PM

நேரம், ராஜா ராணி, நய்யாண்டி போன்ற படங்களில் நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நிலையில் திடீரென்று மலையாள நடிகர் பஹத் பாசிலை மணந்து இல்லறத்தில் செட்டிலானார் நஸ்ரியா. அதன்பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். முன்னதாக இவர்கள் காதலை பெண் இயக்குனர் அஞ்சலிமேனன் கண்டறிந்தார். இவர் இயக்கிய, ‘பெங்களூர்நாட்கள்’ படப்பிடிப்பில் நஸ்ரியா, பஹத் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டனர். அதற்கு தூதராக அமைந்தவர் அஞ்சலி மேனன்.

அப்போது இருவரிடம் பேசிக்கொண்டிருந்த அஞ்சலி மேனன், ‘நஸ்ரியாவை திருமணம் செய்துகொண்டால் மீண்டும் நடிக்க அனுமதிக்க மாட்டீர்களா?’ என பஹத்திடம் கேட்டார். ‘திருமணத்துக்கு பிறகும் அவர் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நீங்கள் இயக்கும் படத்தில் அவரை மீண்டும் நாயகியாக நடிக்க வையுங்கள்’ என்றார். பேச்சுவாக்கில் நடந்த விஷயம்போல் இந்த உரையாடல் அமைந்தாலும் பின்னர் அதுதான் நடந்தது.
பஹத்தை திருமணம் முடித்த நிலையில் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார் நஸ்ரியா.

3 வருடங்கள் கழித்து மீண்டும் அஞ்சலி மேனன் ‘கூடே’ பட ஸ்கிரிப்டுடன் பஹத்தை சந்தித்து நஸ்ரியாவை நடிக்க வைக்க அனுமதி கேட்டார். அதற்கு அவர், ‘ஏற்கனவே நான் சொன்னது சொன்னதுதான் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நஸ்ரியாவை படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்லலாம்’ என்றார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. நஸ்ரியா ரீஎன்ட்ரி படமான இது விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Source: Dinakaran