Go to ...

RSS Feed

சமூக போராளி படத்தில் நடிக்க ஒற்றைகாலில் நின்ற ரோகிணி


சமூக போராளி படத்தில் நடிக்க ஒற்றைகாலில் நின்ற ரோகிணி

6/14/2018 5:00:40 PM

எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகிணி நடிக்கும் படம் டிராபிக் ராமசாமி. விக்கி இயக்குகிறார். இதன் ஒலிநாடா வெளியானது. வைரமுத்து வெளியிட இயக்குனர் ஷங்கர் பெற்றார். நிகழ்ச்சியில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரோகிணி,’எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நான் குழந்தை வேடத்தில் அந்த காலத்தில் தெலுங்கு படமொன்றில் நடித்திருக்கிறேன். அது அவருக்கு ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. அதன் பிறகு அவர் நிறைய படங்கள் இயக்கினார். ஏதாவது ஒரு படத்தில் நாயகியாக நடிப்பேன் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

அது நிறைவேறாமல் இருந்தது. தற்போது அவர் நடிக்கும் படத்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. நிறைய படங்களில் வாய்ப்பு வந்தாலும் நான் தேர்வு செய்தே ஒப்புக்கொள்கிறேன். சமூக பிரச்னைகளுக்காக எதற்கும் பயப்படாமல் போராடும் டிராபிக் ராமசாமி பற்றி அறிவேன். அவரது கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் அவருக்கு ஜோடியாக நான்தான் நடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று வாய்ப்பை கேட்டு வாங்கி நடித்தேன்.

வாழ்க்கை சரித்திர படமான இதில் நானும் இருப்பது பெருமை’ என்றார். இப்படம்பற்றி கருத்து தெரிவித்த கமல்,’சமூகத்துக்காக போராடுபவர்களை அவர்கள் மறைந்த பிறகு பாராட்டு வதை விட அவர்கள் வாழும்போதே பாராட்ட முன்வர வேண்டும். அப்படியொரு நிகழ்வாகவே இதை பார்க்கி றேன். இப்படத்தின் டிரெய்லரை பார்த்தபோதே முழுபடம் பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்ந்து காட்டியிருக்கிறார்’ என்றார்.

Source: Dinakaran