Go to ...

RSS Feed

நோய் பாதித்தால் பயம் வேண்டாம் : கேன்சரிலிருந்து மீண்ட நடிகை உருக்கம்


நோய் பாதித்தால் பயம் வேண்டாம் : கேன்சரிலிருந்து மீண்ட நடிகை உருக்கம்

6/14/2018 5:39:03 PM

நடிகைகள் கவுதமி, மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்ததுடன் மீண்டும் படங்களில் நடிக்கின்றனர். நேதாஜி படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்தவர் லிசா ரே. இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இவரும் கேன்சரால் பாதிக்கப்பட்டு மீண்ட தகவல் தெரியவந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு லிசா ரேக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. நோய் பற்றி தெரியவந்ததும் சிகிச்சைக்கு தயாரானார். ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

இதில் பலன் கிடைத்தது. ஒரே வருடத்தில் கேன்சரிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் முழுமையாக குணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்படவில்லை. 2012ம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த ஜான்சன் டெஹனியை மணந்தார். வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பாலிவுட் படங்களில் தற்போதும் நடித்து வருகிறார். இதுபற்றி லிசா ரே கூறியது: நான் கேன்சர் நோயிலிருந்து மீண்டிருக்கிறேன்.

இப்போது நான் கேன்சர் பட்டதாரி ஆகிவிட்டேன். பலமுறை கீமோதெரபி சிகிச்சை பெற்றேன். தலை முடி இழந்தேன். கவலைப்படவில்லை. மொட்டை போட்டுக்கொண்டேன். உயிருக்காக போராடும்போதுதான் மற்ற எல்லாமே நமக்கு இரண்டாம் பட்சம் என்ற உணர்வு வருகிறது. ஆரோக்கியமாக இருந்தபோது எவ்வளவு சக்தியையும், நேரத்தையும் வீணடித்திருக்கிறோம் என்பதும் அப்போதுதான் யோசனைக்கு வருகிறது.

நோய் தாக்குதலுக்கு உள்ளானபோது பலரும் எனக்கு ஆறுதலும், ஆதரவும் அளித்ததுடன் குணமடைய பிரார்த்தனை செய்தார்கள். அதற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும். அதற்காகத்தான் தற்போது கேன்சர்பற்றி வெளிப் படையாக பேசுகிறேன். இதன் மூலம் கேன்சர்பற்றிய பய உணர்வு குறையும். அதை எதிர்கொண்டால் குணம் அடைய முடியும் என்ற நம்பிக்கை பெறவேண்டும். கேன்சர்பற்றிய விழிப்புணர்வுக்காக என்னால் இயன்ற அளவு நான் பணியாற்றிக்கொண்டிருப்பேன். இவ்வாறு லிசா கூறினார்.

Source: Dinakaran

Facebook Comments