Go to ...

RSS Feed

விஜய் அவார்ட்ஸ் விழா: ஜூன் 16 மற்றும் 17ஆம் தேதி ஒளிபரப்பு


விஜய் அவார்ட்ஸ் விழா, ஜூன் 16 மற்றும் 17ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.
10வது விஜய் அவார்ட்ஸ் விழா, கடந்த 3ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த விழா நடைபெறாததால்,இந்த வருட விழாவுக்குப் பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. நடிகை ராதா,
இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், அனுராக் கஷ்யப், இயக்குநர் மற்றும் நடிகர் யூகிசேது ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்த வருடத்தின்வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
இந்த விழாவில் இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் ரவிச்சந்தர், சந்தோஷ் நாராயணன், இயக்குநர்கள், பாலா, அட்லீ, புஷ்கர் – காயத்ரி, நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, தனுஷ், துல்கர் சல்மான், விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரேவதி, அம்பிகா எனப் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
காஜல் அகர்வால், சயீஷா, அமலா பால் ஆகியோர் நடனமாடி பார்வையாளர்களை ஈர்த்தனர். கோபிநாத், மா.கா.பா.ஆனந்த், டிடி ஆகியோர் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி, வருகிற 16ஆம் தேதி இரவு 8 மணிக்கும், 17ஆம் தேதி மாலை 3 மணிக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Source: Webdunia.com