Go to ...

RSS Feed

தமிழ்படம் 2 – முதல்நாள் வசூலில் மிரட்டித் தள்ளி சாதனை


சிவா நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கும் தமிழ்படம் 2வின் முதல் நாள் வசூல் நிலவரம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரசியல் நிகழ்வுகள், தமிழ் திரைப்பட என அனைத்தையும் கிண்டலடித்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கி வெளியாகியுள்ள தமிழ்படம் 2 அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் நடிகர் விஜய் வரை ஒருத்தரையும் விடமால் கிண்டலடித்துள்ளனர். இப்படத்தில் நடித்துள்ள நடிகர் சிவாவை ரசிகர்கள் அகில உலக பிரபல நட்சத்திரம் என கொண்டாடி வருகின்றனர்.
நேற்று இப்படத்தைக் காண ஏராளமான ரசிகர்களை தியேட்டர்களை நோக்கி படையெடுத்தனர். மாஸ் கதாநாயகன்க்களின் படத்தைப் போல் சிவாவின் இந்த படத்திற்கு பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிவா கணக்கச்சிதமாக பூர்த்தி செய்துள்ளார்.
படத்தின் நேற்றைய வசூல் மட்டும் 6 கோடி ரூபாய். இன்னும் இன்று, நாளை, ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் பின்னிப் பெடலெடுக்கும். 2018 ஆம் ஆண்டு வெளியாகி முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களில் தமிழ்ப்படம்2 முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

Source: Webdunia.com

Facebook Comments