Go to ...

RSS Feed

ரஜினியின் 2.0 பட விளம்பரம் வெளியீட்டு தேதி விபரம் கசிந்தது..!!


விரைவில் வெளிவரும் ரஜினியின் 2.0 விளம்பரம்..!!
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தின் முதல் பார்வை விளம்பரம், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 15ம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சிவாஜி, எந்திரன் படங்களை தொடர்ந்து ஜாம்பவான் ரஜினிகாந்த் மற்றும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் 2.0. இது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வருகிறது.

முற்றிலும் அறிவியல் தொழில்நுட்பம் பெற்ற இந்த கதையில் தமிழ் திரைப்படவிற்கே உரித்தான காதல், அதிரடி, சென்டிமென்ட் போன்ற பல அம்சங்களும் உள்ளன. அதிக பொருட்செலவில் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

தமிழுடன் இந்தியிலும் நேரடியாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. வட இந்தியாவில் கனிசமாக வசூலை பிடிக்கும் நோக்கில் 2.0 படத்தின் ரஜினியின் பகைவனாகக பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடித்துள்ளார்.

தவிர, ஏமி ஜாக்சன், சுதான்ஷூ பாண்டே, அடில் ஹூசைன், கலாபவன் சாஜோன், ரியாஸ் கான் என பல்வேறு நடிகர்கள் 2.0 படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரூ. 500 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 2.0 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு டிரென்டிங் அடித்தன.

தொடர்ந்து படத்தில் மீதமுள்ள பாடல்களும் வெளியிடப்படவுள்ளன. மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள 2.0 படத்தை காண இந்திய திரைப்பட ரசிகர்கள் மிகுந்த ஆவல் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை விளம்பரம், வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 15ம் தேதி வெளியிடப்படும் என சொல்லப்பட்டுள்ளது. ஷங்கரின் படங்களில் எப்போதும் இந்திய ஒருமைப்பாடு, தேசப்பற்று சார்ந்த கருத்துக்கள் சற்று தூக்கலாகவே இருக்கும்.

அதில், ரஜினியும் இணைந்துள்ளதால் இந்த படம் இந்தியாவின் வல்லரசு கனவுகளை முன்வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை உணர்த்தவே 2.0 படத்தின் முதல் பார்வை விளம்பரம் சுதந்திர தின நன்னாளில் வெளியிடப்படுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்தியா திரைப்பட ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரஜினியின் 2.0 திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: samayam

Facebook Comments

Tags: ,