
பிரேசிலில் மாயமான கிரேக்க தூதர் எரித்துக் கொலை
Dec 30, 2016
ரியோ டி ஜெனீரோ:
பிரேசில் நாட்டின் கிரேக்க தூதராக கிரிய கோஸ் அமிரிதிஸ் (59) பதவி வகித்தார். இவர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிரேக்க தூதரகத்தில் பணிபுரிந்தார். அவரது வீடு நோவா இகுயாசூ நகரில் உள்ளது. இது ரியோ டி ஜெனிரோவின் புறநகராகும். சம்பவத்தன்று ரியோ டி ஜெனிரோவில் இருந்து பிராசிலியாவுக்கு புத்தாண்டு கொண்டாட காரில் பயணம் செய்தார். ஆனால் திடீரென அவர் மாயமானார்.
அதை தொடர்ந்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்கிடையே அவர் ரியோ டி ஜெனிரோவில் தனது காருக்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
எனவே அவர் பிணைத் தொகைக்காக மர்ம கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் அது போன்று நடக்க வாய்ப்பில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
Source: Maalaimalar
Facebook Comments