Go to ...

RSS Feed

கொடுங்கையூர், வியாசர்பாடி பகுதியில் உரிமம் இன்றி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல்


பெரம்பூர்: கொடுங்கையூர், எருக்கஞ்சேரியை சேர்ந்த ஷீலா என்பவரின் ஸ்டேஷனரி கடை, ஜிஎன்டி சாலையை சேர்ந்த ரவி சங்கருக்கு சொந்தமான  மரக்கடை, வியாசர்பாடி சர்மா நகரை சார்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடை, கொடுங்கையூர் சிட்கோ நகர் பிரதான சாலையை  சார்ந்த  பழனி என்பவரின் டிபன் கடை ஆகியவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரியை செலுத்தவில்லை. உரிமம் பெறவில்லை என்று  கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் மேற்கண்ட கடைகளுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும், நோட்டீஸ் அளித்தும் தொழில் வரியும், உரிமம்  பெறாமல் தொடர்ந்து கடை நடத்தி வந்தனர். இந்நிலையில், வட சென்னை மாவட்ட வருவாய் அதிகாரியும்  மண்டல அதிகாரியுமான அனிதா உத்தரவின் பேரில் உதவி வருவாய் அதிகாரிகள்   சூரியாபானு, பிரகாஷ், உரிமம் ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, ஜோசப் ஆகியோர்  தலைமையிலான அதிகாரிகள், கொடுங்கையூர் போலீசார் துணையுடன்  4 கடைகளுக்கும் நேற்று காலை அதிரடியாக சீல் வைத்தனர்.

Source: Dinakaran

English summary
Operate without license in kodungaiyur, vyasarpadi area 4 shops sealed

Perambur: Sheila from kodungaiyur, erukkanjeriyai, stationery shop, belonging to Ravi Shanker t.p.p. road

Facebook Comments

Tags: