Go to ...
RSS Feed

திண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொதுக்குழு கூடியது


திண்டிவனம்:

பா.ம.க. புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் 2016-ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2017-ம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

பொதுக்குழுவுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் வடிவேல்ராவணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பொதுக்குழுவில் கட்சி வளர்ச்சி மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. டாக்டர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பா.ம.க. மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் நிர்வாகிகளும் கார்கள் மற்றும் வேன்களில் இன்று காலை முதலே வந்து குவிந்தனர்.

பொதுக்குழுவையொட்டி தைலாபுரம் தோட்டம் முழுவதும் பா.ம.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசை வரவேற்று பல்வேறு பகுதிகளில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

Source: Maalaimalar

Facebook Comments