Go to ...

RSS Feed

நாகர்கோவிலில் தடம்புரண்ட பயணிகள் ரயில் இன்ஜின்: பல ரயில்கள் தாமதம்


நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 7.05க்கு, நாகர்கோவில் – கோவை  பயணிகள் ரயில் புறப்பட்டு செல்லும். நேற்று காலை 6.30 மணியளவில் வழக்கம் போல் ரயில் 1 வது பிளாட்பாரத்துக்கு கொண்டு  வரப்பட்ட ரயிலின் இன்ஜினை மாற்றும் பணி தொடங்கியது. யார்டு லைனில் இருந்து புதிய இன்ஜினை, ஷண்டிங் டிராக்கில் கொண்டு  வந்து ரயிலுடன் இணைக்கப்பட இருந்தது. அப்போது ஷண்டிங் டிராக்கில் ஊட்டுவாழ்மடம் ரயில்வே கேட் அருகே இன்ஜின் வந்து  கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது. இன்ஜின் டிரைவர் நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்தபோது, ஷண்டிங் டிராக்கில்  இருந்து இன்ஜின் முழுவதும் கீழே இறங்கி நின்றது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.  உடனடியாக இதை சரி செய்ய முடியாது என்பதால், மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு, சுமார் 2 மணி நேரம் தாமதமாக  நாகர்கோவில் – கோவை பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. தடம் புரண்டதற்கான காரணம் குறித்து துறை ரீதியான விசாரணை  நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

இன்ஜின் தடம் புரண்டதன் காரணமாக, குருவாயூர் எக்ஸ்பிரஸ், சுமார் 3 மணி நேரம் தாமதமாக நாகர்கோவிலில் இருந்து காலை  8.15 மணியளவில் புறப்பட்டு சென்றது.
இதே போல் காலை 7 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து செல்ல வேண்டிய கன்னியாகுமரி – மும்பை எக்ஸ்பிரஸ் ரயில், சுமார் 2  மணி நேரம் தாமதமாக சென்றது. இதுபோல் நாகர்கோவில் நோக்கி வந்த பெங்களூர் எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ்,  கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களும் சுமார் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாகவே வந்து சேர்ந்தன.

Source: Dinakaran

English summary
Passenger train engine derailed in nagercoil: many trains delayed

Nagercoil: nagercoil junction station each morning from 7.05, nagercoil-Coimbatore passenger w

Facebook Comments

Tags: