Go to ...
RSS Feed

தொழிலாளர்களுக்கு வங்கிக்கணக்கில் சம்பளம் வழங்கிய டீ எஸ்டேட்


கவுகாத்தி:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பின் மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பொருட்கள் வாங்குவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதனை ஊக்குவிக்கும் வகையில் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அசாம் மாநிலம் ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள டீ எஸ்டேட் ஒன்று தனது தொழிலாளர்களின் சம்பளத்தை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளது. மொத்தம் 786 தொழிலாளர்களின் சம்பளம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் சம்பளம் செலுத்திய முதல் தேயிலைத் தோட்டம் என்ற பெருமை இந்த எஸ்டேட்டிற்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து லேபர் அதிகாரி அலிமுதின் பர்புயா கூறுகையில் “இதுநாள்வரை சம்பளம் மொத்தமாகக் கிடைத்ததால் தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு செலவு செய்துவந்தனர். ஆனால் தற்போது வங்கிக்கணக்கில் சம்பளம் செலுத்தப்படுவதால் தேவைப்பட்டால் மட்டுமே பணம் எடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது அவர்களின் எதிர்காலத்தை ஒரு நிலையில் வைத்திருக்க உதவும்” என்றார்.

Source: Maalaimalar

Facebook Comments