Go to ...

RSS Feed

தமிழக போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டார்


சென்னை:

நெல்லை, மதுரை, திருப்பூர், தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி அதன்பின்னர், சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் உதவி ஐ.ஜி.யாக (நிர்வாகம்) பணியாற்றி வரும் அஸ்ரா கார்க், சி.பி.ஐ.க்கு போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் மாற்றப்பட்டுள்ளார்.

தொடக்க பதவிகாலமாக அவருடைய பணிகள் 4 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவரை தமிழக காவல் பணியில் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.

Source: Maalaimalar