Go to ...

RSS Feed

நிலைமையை பார்த்தால் முலாயம் சிங்கிடமிருந்து 'சைக்கிள' பறிச்சி விட்டுருவாங்க போல இருக்குதே


லக்னோ: உட்கட்சி பிரச்சினை முற்றியுள்ள நிலையில், முலாயம் சிங் யாதவ் மற்றும் அவர் மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோர் நடுவே ஏற்பட்டுள்ள பனிப்போர் காரணமாக இத்தனை காலம் கட்டி காத்து வந்த, சைக்கிள் சின்னம் பறிபோய்விடும் சூழல் எழுந்துள்ளது.

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தையும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. நேற்று கட்சி சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முலாயம் அறிவித்தார். அதில் அகிலேஷின் ஆதரவாளர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.

இதற்கு போட்டியாக அகிலேஷ் 35 பேர் கொண்ட தனிபட்டியல் ஒன்றை வெளியிட்டார். இது பிரிவை அதிகமாக்கியது. இந்நிலையில்தான், 6 வருடங்களுக்கு கட்சியிலிருந்து, அகிலேஷ் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கட்சியா, அகிலேஷா

இப்போது கட்சிக்காரர்கள்தான் தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு அகிலேஷின் பிம்பம் பிடிக்கும். அதேநேரம் கட்சியையும் நேசிக்கிறார்கள். அகிலேஷ் vs கட்சி என நிலைமை மாறிப்போனதில் அவர்களுக்கு வருத்தம்.

சைக்கிள் போச்சே

சைக்கிள் போச்சே

இதில் கவனிக்க வேண்டியது, நாடாளுமந்ற உறுப்பினரான ராம் கோபால் யாதவையும், முலாயம்சிங் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளதைத்தான். கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அவர், தனக்கு அதே சின்னம்தான் வேண்டும் என தேர்தல் கமிஷனையோ கோர்ட்டையோ அணுக முடியும்.

சுயேட்சை

சுயேட்சை

இப்படி ஒரு பிரச்சினை எழுந்தால், வரும் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சைக்கிள் சின்னத்தை இழக்க நேரிடும். வழக்கு முடியும்வரை சின்னத்தை முடக்கி வைக்க உத்தரவு வந்தால் இதுதான் நிலைமை. இன்னொரு வாய்ப்பு என்னவென்றால், அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் அனைவரும் ஒரே சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுவதுதான்.

காங்கிரசில் இணைவாரா?

காங்கிரசில் இணைவாரா?

தனிக்கட்சி தொடங்கப்போவதில்லை என அகிலேஷ் கூறிவரும் நிலையில், அவர்களிடம் இருப்பது இந்த ஒரு ஆப்ஷனாகத்தான் இருக்கும். இப்படி சுயேட்சையாக மோதுவது அல்லது, காங்கிரசில் இணைவது அகிலேஷ் யாதவ் திட்டமாக இருக்கும் என்கிறார்கள்.

எது எப்படியோ உ.பியில் சூழ்ந்துள்ள அரசியல் மேகங்கள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. “அவுங்க அவுங்க எடுக்குற முடிவு, நமக்கு சாதகமாத்தான் இருக்கு..” என்ற வடிவேலு டயலாக்கை பாஜக நினைத்து பார்த்து புழகாங்கிதம் அடைந்து கொள்ளலாம்.

Source: OneIndia