Go to ...

RSS Feed

அப்படியா? சசிகலா பொறுப்பேற்றது குறித்த கேள்விக்கு ஸ்டாலின் சொன்ன பதில்!


சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலா இன்று பதவியேற்றது குறித்த கேள்விக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் ‘அப்படியா?’ என்று மட்டும் கேட்டுவிட்டு சென்றார்.

சென்னை கொளத்தூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் கட்டும் பணிகளை பார்வையிட்டார் அத்தொகுதி எம்எல்ஏ ஸ்டாலின். அப்பணிகளை விரைவாக முடிக்கவும் அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தம்முடைய கொளத்தூர் தொகுதி ஆய்வு குறித்து விவரித்தார். மேலும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், அதிமுக பொதுச்செயலராக சசிகலா இன்று பொறுப்பேற்கிறாரே.. அதுபற்றி உங்கள் கருத்து என் என கேட்டார். அதற்கு, அப்படியா? பொறுப்பேற்கிறாரா என கிண்டலாக கேட்டுவிட்டு புறப்பட்டார் ஸ்டாலின்.

Source: OneIndia