Go to ...

RSS Feed

முதல்வர் உட்பட ஆளும் கட்சியின் 33 எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்! அருணாச்சலபிரதேசத்தில் பாஜக ஆட்சி?


இடா நகர்: அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் 33 பேர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அக்கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அருணாச்சல் மக்கள் கட்சியிலிருந்து முதல்வர் பெமா காண்டு, துணைமுதல்வர், 7 எம்.எல்.ஏக்கள் நேற்று நீக்கப்பட்டனர். இந்நிலையில் அருணாச்சல் மக்கள் கட்சியின் பெமா காண்டு மற்றும் 32 எம்.எல்.ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து பெமா காண்டு கூறுகையில், “நான், சபாநாயகர் உட்பட 33 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துகொண்டோம். எனவே, இப்போது இது பாஜக அரசாகும். ஏற்கனவே நாங்கள் பாஜகவில் இணையவே திட்டமிட்டிருந்தோம். எங்கள் கட்சி தலைமையின் நடவடிக்கை அதை துரிதப்படுத்திவிட்டது” என்றார். வடகிழக்கு மாநிலம் ஒன்றில் பாஜக முழு பலத்தோடு ஆட்சியில் அமருவது அருணாச்சல பிரதேசத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது (அசாமில் கூட்டணி).

அருணாச்சல் மக்கள் கட்சியின் மொத்த எம்எல்ஏக்கள் பலம் 43 ஆகும். அதில் இப்போது 10 பேர்தான் அதே கட்சியில் எஞ்சியுள்ளனர். பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், 2 சுயேட்சைகளும் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். தற்போது மேலும் 33 எம்எல்ஏக்கள் இணைந்துள்ள நிலையில், பாஜக பலம் 47ஆக உயர்ந்துள்ளது.

Source: OneIndia