Go to ...
RSS Feed

பொதுமக்கள் அதிர்ச்சி : கணினிமய புக்கிங் செய்தால் காஸ் மானியம் கட்


ஈரோடு: நாடு முழுவதும் ஐ.ஓ.சி., இந்துஸ்தான், பாரத் ஆகிய மூன்று எண்ணைய் நிறுவனங்கள் மூலம் நுகர்வோருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 1 கோடியே 70 லட்சம் எரிவாயு சிலிண்டர் இணைப்பு உள்ளது. இதில், 1 கோடியே 60 லட்சம் வாடிக்கையாளர்கள் மத்திய அரசின் மானிய திட்டத்தில் உள்ளனர்.  ஆரம்பத்தில், வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக்கிங் செய்தால், அந்த சிலிண்டருக்கான சந்தை மதிப்பில், மானியம் போக மீதமுள்ள தொகையை மட்டும் டெலிவரி பாய்ஸ்களிடம் நேரில் செலுத்தி சிலிண்டர் பெறும் நடைமுறை இருந்தது.

ஆனால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த நடைமுறை மாற்றப்பட்டது. சமையல் எரிவாயு இணைப்புடன் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண் இணைக்கப்பட்டு, வங்கி கணக்கில் மானியத்தொகை செலுத்தப்பட்டு விடுகிறது. அதனால், சிலிண்டருக்கான சந்தை மதிப்பு தொகை முழுவதையும் டெலிவரி பாய்ஸ்களிடம் செலுத்தி, சிலிண்டர் பெறும் நடைமுறை தற்போது உள்ளது.
 சமையல் எரிவாயு இணைப்புடன் ஆதார் எண், வங்கி கணக்கு எண் இணைக்காத நுகர்வோருக்கு மானியத்தொகை ‘’கட்’’ செய்யப்பட்டு விட்டது. மானியத்தொகை வங்கியில் செலுத்தப்படும் நடைமுறை அமலில் இருந்தாலும், அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆன்லைனில் சிலிண்டர் புக்கிங் செய்வோருக்கு இந்த சிக்கல் உருவாகியுள்ளது. சமையல் எரிவாயு கோரும் வாடிக்கையாளர்கள், தங்களது விநியோகஸ்தர்களிடம் டெலிபோனில் தொடர்புகொண்டு புக்கிங் செய்யலாம் அல்லது நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்பியும் புக்கிங் செய்து கொள்ளலாம். இது, அல்லாமல் ஆன்லைன் மூலமும் புக்கிங் செய்துகொள்ள முடியும். இப்படி, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் செப்சைட்டில் ஆன்லைனில் புக்கிங் செய்யும்போது சிலிண்டருக்கான முழு தொகையையும், நெட்பேங்கிங் மூலம் செலுத்தி விட வேண்டும்.  இதுபோல், ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க எண்ணைய் நிறுவனங்கள் ரூ.5 கட்டண சலுகை வழங்குகிறது. இப்படி 5 ரூபாய் கட்டண சலுகை கொடுத்துவிட்டு, சமீப காலமாக இவ்வகை வாடிக்கையாளர்களுக்கு மானியத்தொகையை ‘’கட்’’ செய்யப்பட்டு விட்டன.  இதுபற்றி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கூறுகையில், டிஜிட்டல் மயம் என மத்திய அரசு அறிவித்துவிட்டு, தற்போது ஆன்லைனில் சமையல் காஸ் சிலிண்டர் புக்கிங் செய்வோருக்கு கடந்த 4 மாதங்களாக மானியத்தொகை நிறுத்தப்பட்டு விட்டது. இதுகுறித்து விநியோகஸ்தர்களும், அதிகாரிகளும் பதில் அளிக்க மறுக்கிறார்கள் என்றனர்.
 இது தொடர்பாக எண்ணெய் நிறுவன அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டால், இதுபற்றி அரசிடம்தான் கேட்க வேண்டும். இதில், நாங்கள் தலையிட முடியாது என பதிலளிக்க மறுத்து விட்டனர்.

Source: Dinakaran

English summary
Public shock: online booking construction subsidy by Goss

Erode: to throughout the country. c., Hindustan, bharath by three oil companies and consumers burning cooking

Facebook Comments

Tags: