Go to ...
RSS Feed

ஏட்டை கொன்றது ஏன்? மணல் தாதா வாக்குமூலம்


நெல்லை : மணல் கடத்தலில் கையும், களவுமாக பிடிபட்டதால் வேறு வழியில்லாமல் அவரை அடித்துக் கொன்றதாக கைதான மணல் தாதா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். நெல்லை மாவட்டம நாங்குநேரி அருகே உள்ள கீழசிந்தாமணியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்துரை (34). விஜயநாராயணத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்த இவர், கடந்த 7ம் தேதி நள்ளிரவு விஜயநாராயணம் அருகே பாண்டிச்சேரி பகுதியில் மணல் கடத்தலை தடுக்க ரோந்து சென்றார். அப்போது மணல் கடத்தும் கும்பலால் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் பரப்பாடி அருகேயுள்ள பொத்தையில் பதுங்கியிருந்த மணல் தாதா முருகனை தனிப்படையினர் கைது செய்தனர்.

போலீசில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு: நான் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் மணல் கடத்தி வருகிறேன். இதுபற்றி தனிப்பிரிவு ஏட்டு ஜெகதீஷ்துரை, எஸ்பியிடம் அவ்வப்போது தெரிவித்ததால் எனக்கு பல இடையூறுகள் வந்தன. பலமுறை எச்சரித்தும் அவர் பொருட்படுத்தவில்லை. இதனிடையே கடந்த 7ம் தேதி இரவு டிராக்டரில் மணல் கடத்தும் போது அங்கு தனியாக வந்த ஏட்டு ஜெகதீஷ்துரை  என்னையும், எனது ஆட்களையும் கைது செய்ய முயற்சித்ததோடு மற்ற போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கையும் களவுமாக சிக்கியதால் நானும், எனது ஆட்களும் அவரை இரும்பு பைப் மற்றும் கம்பியால் தாக்கி ெகான்றோம் என்றார்.

Source: Dinakaran

English summary
Book I killed? Sand Dada confessions

Paddy: sand in smuggling arms and caught RedHanded choice because it was beating him killing arrested sand Dada

Facebook Comments

Tags: