Go to ...
RSS Feed

மழையால் கட்டுமான பணி முடங்கியது மணல் விலை ரூ.5 ஆயிரம் சரிவு


கோவை:  கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையால், கட்டுமான பணி முடங்கியது. இதனால் ஆற்று மணல் விலை ஒரு லோடுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.30 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் நடக்கும்  கட்டுமான பணி ஆகியவற்றிற்கு மணல் தினசரி 5 ஆயிரம் லோடு தேவை. ஆனால், கடந்த ஒரு ஆண்டாக மணல் குவாரிகள் மூடலால், மணல் வினியோகம் குறைந்தது. தினசரி 300 லோடு மட்டுமே வருகிறது. விலையும் ரூ.40 ஆயிரம் வரை உயர்ந்தது.  மணல் வரத்து குறைவு மற்றும் விலை உயர்வால் 60 சதவீத கட்டுமான பணிகள் முடங்கியது. தற்போது பாதிக்கும் மேற்பட்ட கட்டுமான பணிகள் எம்.சாண்ட் எனப்படும் செயற்கை மணலால் கட்டப்பட்டு வருகிறது. பாதி கட்டடங்கள் ஆற்று மணலை எதிர்பார்த்து கட்டப்பட்டு வருகிறது.

ஆற்று மணலுக்கு கிராக்கி நிலவி வந்தததால், கடந்த சில மாதங்களாக, மணல் விலை ஒரு லோடு ரூ.35 ஆயிரம் என்கிற அளவிலேயே இருந்து வந்தது.  இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மணல் வரத்தும் 50 லோடு குறைந்து, 250 லோடு மட்டும் வருகிறது. வரத்து குறைந்ததால் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மணல் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு நடக்கவில்லை. இதனால் விலை லோடுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து கடந்த ஒரு வாரமாக ரூ.30 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.  இதுகுறித்து மணல் வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த கனமழையால் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளது. இதனால் மணலின் தேவை குறைந்ததால் விலை சரிவடைந்தது. வரும் நாட்களில் மழை ஓய்ந்து, கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கும், மணல் விலை உயரும்’ என்றனர்.

Source: Dinakaran

English summary
The construction work is paralyzed by rains, sand price RS. 5,000 thousand decline

Coimbatore: Coimbatore district in the last one week as heavy rains crippled by heavy rain, building work. As a result, the price of a river sand x

Facebook Comments

Tags: