Go to ...

RSS Feed

திருவண்ணாமலையில் 4 கோயில்களின் 153 சிலைகளை கணக்கிட்டு சரி பார்க்கும் பணி தீவிரம்


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிலைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்ணாமலையார் கோவிலில் நடராசர், சோமாஸ்கந்தர், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் பஞ்சலோக, பித்தளை, தாமிரம் உள்ளிட்ட உலோகங்களினால் ஆனவை ஆகும். தொல்லியல் துறை சார்பில் சிலைகளின் எடை, உயரம் உள்ளிட்ட பல தகவல்கள் கணக்கிட்டு சரி பார்க்கும் பணிகள் நடைபெறுகிறது. இது பற்றி கூறிய பக்தர்கள் பஞ்சலோக சிலைகளை உரிய முறையில் ஆய்வு செய்து 6 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுத்து பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சிலைகளின் எடைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா எனவும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் அண்ணாமலையார் கோவில் உட்பட 4 கோயில்களில் உள்ள 153 சிலைகளை சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு சுவாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு சிலைகள் ஊழல் தொடர்பாக தற்போது பல்வேறு வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், சிலைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

Facebook Comments

Tags: