Go to ...

RSS Feed

நீலகிரியில் அரசு பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசுப் பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. இந்த நிலையில் உதகையில் இருந்து குன்னூர் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. மந்தடா என்ற இடத்தில் பேருந்து சென்ற போது சாலையில் பள்ளம் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர் வலதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலைப்பாதையில் இருந்து கவிழ்ந்து உருண்டு 100 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. பேருந்துக்குள் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த கோர விபத்தில் பயணிகள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பேரிடர் மீட்புக் குழுவினரும், தீயணைப்புத்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் உதகை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Source: Dinakaran

Facebook Comments

Tags: