Go to ...

RSS Feed

சபாநாயகர் உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகலாம் : சட்ட நிபுணர் கருத்து


சென்னை: 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தர் தெரிவித்தார். 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால் வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.சபாநாயகர் உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சுப்பிரமணீயம் கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிபதி சுந்தர் தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் எம்.எல்.ஏக்கள் நீக்கம் அரசு ஊழியர் நீக்கம் போன்றது அல்ல என்றும் சட்ட நிபுணர் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக்கோரி டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடந்த 2017 செப்டம்பர் 18-ம் தேதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததையடுத்து, 18 எம்.எல்.ஏ-க்களை பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

Tags: