Go to ...

RSS Feed

மக்களின் நம்பிக்கையை ஆளும் அரசு இழந்திருக்கிறது : முத்தரசன் கருத்து


சென்னை : மக்களின் நம்பிக்கையை ஆளும் அரசு இழந்திருக்கிறது என்று சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.18 எம்.எல்.ஏக்களின் நீக்கத்தால் நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், பழனிச்சாமி தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தர் தெரிவித்தார். 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால் வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

Tags: