Go to ...

RSS Feed

சரியான காரணங்கள் இல்லாமல் சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது : தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி


சென்னை : சரியான காரணங்கள் இல்லாமல் சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது : தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்தார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 190 பக்கங்களை கொண்ட தீர்ப்பினை வழங்கினார். மேலும் சபாநாயகர் இப்படித்தான் செயல்பட வேண்டும் என நிர்பந்திப்பது நீதிமன்ற பணி அல்ல என்றும் இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிடுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளன என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார். முன்னதாக 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் இந்திரா பேனர்ஜியும், சுந்தரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

Tags: