Go to ...

RSS Feed

மூன்றாவது நீதிபதி அதிவிரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்:மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்


image

18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு சென்றுள்ளது. மூன்றாவது நீதிபதி அதிவிரைவாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது குறித்து ஜவாஹிருல்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 18 உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் அறிவித்த 9 மாதங்கள் கழித்து இன்று அந்த வழக்கில் சென்னை நீதிமன்றத்தின் முதல் அமர்வு முரண்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

இச்சூழலில் இவ்வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 18 சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதிகளே இல்லை என்ற சூழல் 9 மாதங்களாக நிலவி வருகின்றது. இதனைக் கருத்தில் கொள்ளாமல் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிமன்றத்திற்கு நீண்ட காலம் பிடித்துக் கொண்டது.

இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாகவே இருக்கின்றது. முரண்பட்ட தீர்ப்பு வந்த நிலையில் மூன்றாவது நீதிபதி உடனடியாக இந்த வழக்கை விசாரித்து அதிவிரைவில் தீர்ப்பு வழங்கவேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.” இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Source: The Hindu

Facebook Comments

Tags: