Go to ...

RSS Feed

நாராயணசாமிக்கு பதிலாக ரங்கசாமி வீட்டுக்கு மத்திய அரசு கடிதம்: கடிதங்களை அனுப்புவதில் தொடர்ந்து குழப்பம்


புதுச்சேரி: புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமிக்கு மத்திய அரசு அனுப்பும் கடிதங்கள் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டு முகவரிக்கே செல்வதாக புகார் எழுந்துள்ளது. விநாயகர் கோயில் தெரு, திலாசுபேட், புதுச்சேரி 9 என்ற முகவரியில் உள்ள ரங்கசாமியின் வீடு தான் அவர் ஆட்சியில் முதலமைச்சர் அலுவலகமாக இருந்தது. தற்போது நாராயணசாமி முதலமைச்சராக உள்ள நிலையில் அவருக்கு மத்திய அரசு அனுப்பும் கடிதங்கள் அனைத்தும் ரங்கசாமியின் வீட்டு முகவரிக்கே செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

துறைகளுக்கான வாரிய தலைவர்களை நியமிப்பதற்கான சில விளக்கங்களைக் கேட்டு மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு கடிதம் அனுப்பிய போது, மத்திய அரசிடம் இருந்து வந்த பதில் கடிதம் ரங்கசாமியின் வீட்டிற்கே அனுப்பப்பட்டுள்ளது. முகவரி தவறு என ஏற்கெனவே புதுச்சேரி அரசு கூறி விட்ட நிலையில், தற்போது நிதி ஆயோக்கில் இருந்து ரங்கசாமியின் வீட்டிற்கே கடிதம் சென்றுள்ளதாக முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: Dinakaran

Facebook Comments

Tags: