Go to ...

RSS Feed

அமெரிக்க நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியான சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவாரா


For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

ஹவுஸ்டன்: அமெரிக்காவின் ஆட்டோ மொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த சூர்யதேவாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் திவ்யா சூர்யதேவாரா (39). இவர் தற்போது அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் கார்பரேட் நிதித் துறையின் துணை தலைவராக உள்ளார்.

ஓய்வு பெறுகிறார்

இங்கு தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் தலைமை நிதி அதிகாரி சக் ஸ்டீவன்ஸ் (58) கடந்த ஜனவரி 2014- ஆம் ஆண்டு முதல் அப்பதவியில் வகித்து வருகிறார். இவர் இந்த நிறுவனத்தில் 40 ஆண்டுகாலமாக பணியாற்றி வருகிறார். இவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பணி ஓய்வு பெறுகிறார்.

முதல் பெண்

எனவே இவருக்கு பதிலாக தலைமை நிதி அதிகாரி பதவிக்கு சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவாரா நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறார்.

முதல் பெண்ணும் இவர்தான்

இவர் அந்த நிறுவனத்தின் பொது மேலாளரின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பாராவின் கீழ் பணியாற்றுகிறார். ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைவராக கடந்த 2014 முதல் நியமிக்கப்பட்டார். ஆட்டோமொபைல் நிறுவனத்தை ஏற்று நடத்தும் முதல் பெண் பாராதான்.

இருவரும் பெண்களே…

அதுபோல் ஆட்டோ நிறுவனத்தில் சிஇஓ, சிஎஃப்ஓ பதவிக்கு வரும் முதல் பெண்கள் பாராவும், சூர்யதேவாராவும் ஆவர். உலகின் எந்த ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமும் பெண் சிஇஓ அல்லது சிஇஓ மற்றும் சிஎஃப்ஓ ஆகியோரை பெண்களாக நியமித்ததில்லை.

Source: OneIndia

Facebook Comments