Go to ...

RSS Feed

மது வாங்கிக்கொடுத்த நண்பர்களுக்கு மனைவியை விருந்து படைத்த புதுமாப்பிள்ளை


திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (36). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி(24). இவர்களுக்கு கடந்த மாதம் 25ம் தேதி திருமணம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாமனார் வீட்டில் நடந்த விருந்தில் மனைவியுடன் ராஜேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் மனைவியுடன் வீடு திரும்பிய ராஜேந்திரன், நண்பர்கள் 2 பேருடன் தலைஞாயிறு அருகே உள்ள அருந்தவப்புலம் குறவன்கோயில் வனப்பகுதியில் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அவரது திருமணத்திற்கு நண்பர்கள் செலவு செய்து மது விருந்து கொடுத்துள்ளனர். இதற்கு அவர்களுக்கு பரிசு ெகாடுக்க விரும்புவதாக கூறிய ராஜேந்திரன் பைக்கில் வீட்டிற்கு வந்தார். பின்னர் மனைவி லட்சுமியிடம் தன்னுடன் பைக்கில் வரும்படி கூறியுள்ளார். அவரும் கணவருடன் பைக்கில் புறப்பட்டார். ராஜேந்திரன், குறவன்கோயில் வனப்பகுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கிருந்த ராஜேந்திரனின் நண்பர்கள் இருவரும், போதையுடன் லட்சுமியின் அருகில் வந்து  லட்சுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்தனர்.

இதனை ராஜேந்திரன் கண்டுகொள்ளாமல் இருந்தார். சில நிமிடங்களுக்குப்பின் லட்சுமியை நண்பர்கள் விடுவித்தனர். பின்னர் அழுது கொண்டே இருந்த மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்த ராஜேந்திரன், நடந்த சம்பவம் குறித்து கேள்வி கேட்டதால் அவரை அடித்து உதைத்துள்ளார். இதில் லட்சுமியின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நேற்று திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த மருத்துவமனை பணியாளர்கள், திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.அப்போது ராஜேந்திரன் அடிக்கடி சைக்கோபோல் நடந்து கொள்வார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி, நிருபர்களிடம் திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் கூறுகையில், `லட்சுமியின் கணவர் ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பலாத்காரத்தில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் கமல்ராஜ், முருகன் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தது தலைஞாயிறு பகுதியில் என்பதால் அந்த போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கு பதிந்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்’ என்று தெரிவித்தார். புது மனைவியை நண்பர்களுக்கு கணவனே பரிசளித்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

Source: Dinakaran

Tags: