Go to ...

RSS Feed

என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள் எல்லோருக்கும் வேலை தரமுடியாது: மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கைவிரிப்பு


நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் சூரிய ஒளி மின்நிலையத்தை அமைத்துள்ளது. இந்த 300 மெகவாட் சூரிய ஒளி மின் நிலையத்தை மத்திய நிலக்கரி அமைச்சர் பியூஸ் கோயல் நெய்வேலியில் நேற்று நடந்த விழாவில் நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்எல்சி நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வட மாநிலத்திற்க்கு தொடர் வண்டிமூலம் நிலக்கரி எடுத்த செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக தொடர் வண்டிசேவைகள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் – நெல்லை அந்த்தோதியா தொடர் வண்டிகடலூர் மாவட்டத்தில் நின்று செல்ல என்எல்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. அந்த தொடர் வண்டிகடலூர் நின்று செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்எல்சிக்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் வேலை உரிமை கோருகிறார்கள். வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை என்எல்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனால் நிலம் கொடுத்தவர்கள் எல்லோருக்கும் வேலை தரமுடியாது. என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிர்வாகம் போதிய ஊதியம் வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinakaran

Facebook Comments

Tags: