Go to ...

RSS Feed

இணையத்தில் 18ம் தேதி முதல் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்


சென்னை: ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 18ம் தேதி முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நடத்தப்படும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரை www.tnscert.org என்ற இணைய தளத்தில் வெளியாகிறது. உரிய கட்டணத்தை செலுத்தி பிளஸ் 2 முடித்த மாணவ மாணவியர் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். கட்டணங்கள் குறைப்பு(டெபிட்) மற்றும் கிரடிட் அட்டைகள் மூலம் மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம். விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரையில் பொதுப்பிரிவு, பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டிய விவரங்கள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தொடர்பான விவரங்கள் மேற்கண்ட இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Source: Dinakaran

Facebook Comments

Tags: