Go to ...

RSS Feed

4 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரசில் மீண்டும் இணைந்த ஆந்திர முன்னாள் முதல்வர்


காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார். #KiranKumarReddy #ReddyRejoinsCongress

புதுடெல்லி:

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்த கிரண் குமார் ரெட்டி, மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2014-ம் ஆண்டு முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார். அதன்பின்னர் ஜெய் சமைக்யா ஆந்திரா  என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தார். ஆனால் அவரது கட்சி தோல்வியை சந்தித்தது.

அதன்பின்னர் தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்த கிரண் குமார் ரெட்டி பா.ஜ.க.வில் இணையலாம் என தகவல் வெளியானது. ஆனால் இணையவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் தொடர்பில் இருந்தார். இதனால் அவர் காங்கிரசில் சேருவது உறுதி ஆனது.

இந்நிலையில், இன்று டெல்லி சென்ற கிரண் குமார் ரெட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, காங்கிரசில் சேரும் தனது விருப்பத்தை தெரிவித்தார். இதனை ராகுல் காந்தி வரவேற்றார்.

இதையடுத்து கட்சி தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி தலைமையில், ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் உம்மன் சாண்டி, ஆந்திர மாநில தலைவர் ரகுவீர ரெட்டி ஆகியோர் முன்னிலையில், கிரண் குமார் ரெட்டி தன்னை மீண்டும் காங்கிரசில் இணைத்துக்கொண்டார். கிரண் குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியதை கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா முறைப்படி அறிவித்தார். #KiranKumarReddy #ReddyRejoinsCongress

Source: Maalaimalar

Facebook Comments