Go to ...

RSS Feed

அய்யா, சாமீ.. நடுவானில் விமானத்தில் பிச்சை எடுத்த ஆசாமி… அதிர்ச்சி காணொளி!


For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

கத்தார்: கத்தார் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் மற்ற பயணிகளிடம் பிச்சை எடுத்த காணொளி வெளியாகி உள்ளது.

அந்த விமானம் கத்தாரில் இருந்து ஈரான் நோக்கி சென்றிருக்கிறது. அப்போது பயணி ஒருவர் விமானம் நடுவானத்தில் செல்லும் போது, தன்னுடைய இருக்கையில் அமராமல் எழுந்து நின்று பிச்சை எடுத்துள்ளார்.திடீரென தமது கையில் இருந்த பிளாஸ்டிக் பையை நீட்டி, சக பயணிகளிடம் பணம் தரும்படி கேட்டுள்ளார்.

முதலில் அவரை தீவிரவாதி, பணம் கேட்டு மிரட்டுவதாக நினைத்துப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரித்ததில் அவர் ஒரு பிச்சைக்காரர் என்பது தெரிய வந்துள்ளது.

விமானத்தில் பயணிக்கும் முன் முறையான பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனாலும் கூட இந்த வினோத செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த செயலை கத்தார் விமான ஊழியர்களை எதிர்பார்க்கவில்லை.

விமானத்தில் பயணிக்கும் முன் முறையான பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனாலும் கூட இந்த வினோத செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த செயலை கத்தார் விமான ஊழியர்கள் எதிர்பார்க்கவில்லை.

மேலும் அவர் பிச்சை எடுத்த காட்சியினை அங்கு இருந்த நபர் ஒருவர் காணொளி பதிவேற்றம் செய்து உள்ளார். சக பயணிகளிடம் பிச்சை எடுத்த அந்த காணொளிவானது இப்பொழுது வைரலாகி கொண்டு வருகிறது.

Source: OneIndia

Facebook Comments