Go to ...

RSS Feed

பிளாஸ்டிக் பைகளால் முகத்தை மூடி குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை : மதுரையில் சோக சம்பவம்


மதுரை: கை, கால்களை கயிற்றால் கட்டி, பிளாஸ்டிக் பைகளால் முகத்தை மூடி மூச்சை திணறடித்து இரு குழந்தைகளை கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டார். மதுரை, சத்யசாய் நகர் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா. அங்குள்ள கோழிக்கடையில் வேன் டிரைவராக உள்ளார். மனைவி மைக்கேல் ஜீவா (35). இவர்களுக்கு ஹரிதா (4), ஹரி கிஷோர்குமார் (3) என 2 குழந்தைகள் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு ராஜா வேலைக்கு சென்று விட்டார். மனைவி, குழந்தைகள் வீட்டில் இருந்தனர். நேற்று காலை நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குழந்தைகள் ஹரிதா, ஹரி கிஷோர்குமார் இறந்து கிடந்தனர். அவர்களின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. முகம் பிளாஸ்டிக் பைகளால் கட்டப்பட்டிருந்தன. ஜீவா, மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கி இறந்து கிடந்தார். மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாவுக்கு தகவல் கொடுத்து, போலீசார் வரவழைத்து விசாரணை
நடத்தினர்.

தற்கொலை செய்து கொண்ட ஜீவா எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது. கடிதத்தில், ‘‘எனக்கு செய்த துரோகத்திற்கு நீ அனுபவிப்பாய். நான் பார்க்கத்தான் போகிறேன். என்னை எவ்வளவோ கேவலப்படுத்தினாய். ஆனால், இப்ப சொன்ன பார்த்தியா? எனக்கு யாருடனும் கள்ளத்தொடர்பு இல்லை. நீயும், உன் குடும்பமும் சரியாக அனுபவிப்பீர்கள். எங்களது உடல்களை அவரிடம் (ராஜா) ஒப்படைக்க கூடாது’’ என எழுதப்பட்டிருந்தது. போலீசார் கூறும்போது, ‘‘ராஜா, மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் அடித்து கொடுமைப்படுத்தியபோது, மனைவி ஜீவா, சுப்பிரமணியபுரம் காவல் துறை ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.  மீண்டும் இவர் மனைவியை கொடுமைப்படுத்திய விபரம் கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜாவிடம் விசாரித்து வருகிறோம்,’’ என்றனர்.

Source: Dinakaran

Facebook Comments

Tags: