Go to ...

RSS Feed

போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் சென்ற இளைஞர்கள் : போலீசிடம் தகராறு செய்த 3 பேர் கைது


தஞ்சை: தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகே போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசிடம் தகராறு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை ரயில்வே நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தி்ல் வந்த 3 பேர் ஆற்றுப்பாலம் அருகேயுள்ள போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் சென்றனர்.

இதனால் அவர்களை வழிமறித்த போக்குவரத்து போலீஸ் வண்டியில் இருந்த சாவியை எடுத்ததால் தகராறு ஏற்பட்டது. போலீசிடம் தகராறு செய்த சதீஷ்குமார், சபேஷ், வீரமணி ஆகியோரை கைது செய்த காவல்துறை அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளது.

Source: Dinakaran

Tags: