Go to ...

RSS Feed

விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து கேரள மீனவர் உடல் மீட்பு


நாகர்கோவில்: குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த ஏசுபாலன், அவரது தம்பிகள் ராஜேஷ்குமார், ஆரோக்கிய தினேஷ் உள்ளிட்ட 14 பேர் கேரள மாநிலம் கொச்சி, முனம்பம் துறைமுக பகுதியில் இருந்து ‘ஓசியானிக்’ என்ற படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடந்த 7ம் தேதி அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இந்திய சரக்கு கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதியதில் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதில் யாக்கோபு(57), யுகநாதன்(45), சகாயராஜ்(50) ஆகிய 3 பேர் இறந்தனர். காயங்களுடன் உயிர் தப்பிய எட்வின், நரேன் சர்க்கார் ஆகியோர் எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதர 9 பேர் விசைப்படகுடன் கடலில் மூழ்கி மாயமாகினர்.

அவர்களை கடற்படையினர் தேடி வந்தனர். கடந்த 11ம் தேதி இரவு நடுக்கடலில் அழுகிய நிலையில் ஒரு உடல் கண்ெடடுக்கப்பட்டது. இது கொச்சி, மாலியங்கரையை சேர்ந்த சிஜூ(42) என்பது தெரியவந்தது. பின்னர் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் உடல் கொண்டு செல்லப்பட்டது. நேற்று பிரேத பரிசோதனை நடத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற 8 பேரை தேடும் பணி தொடர்கிறது.

Source: Dinakaran

Tags: