Go to ...

RSS Feed

கோவையில் பா.ஜ. நிர்வாகி கடைக்கு தீவைப்பு


கோவை: கோவை ரத்தினபுரி குப்பாத்தாள் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் மகன் புவனேஷ்வரன் (35). கணபதி பகுதி பா.ஜ.க.வின் மண்டல பொதுச் செயலாளர். இவர், காந்திபுரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு 7-வது வீதியில் ஆண்களுக்கான ரெடிமேட் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கடையின் ஷட்டர்  தீப்பிடித்து எரிந்தது.

தகவலின் பேரில் கோவை தெற்கு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். சிசிடிவி பதிவுகளை பார்த்த போது மர்ம ஆசாமிகள் 2 பேர் பெட்ரோல் ஊற்றி தீவைத்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Source: Dinakaran

Tags: