Go to ...

RSS Feed

ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் மத்திய அரசு பெரும் ஊழல்: நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


ஈரோடு: நாட்டின் பாதுகாப்புக்காக ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதில் மத்திய அரசு பெரும் ஊழல் செய்வதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் குழு முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்றார். விமானத்தின் தரம் மற்றும் செயல்திறனை வேண்டுமானால் நாட்டின் பாதுகாப்பு கருதி மறைக்கலாம் என்று கூறிய அவர், அதன் விலையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது கடும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. மேலும் நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ரபேல் ஊழல் தொடர்பான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் பாஜக கட்சி அதிக லாப நோக்கத்துடன் செயல்பட்டதாக அவர்கள் குற்றம் குற்றம் சாட்டினர்.

Source: Dinakaran

Tags: