Go to ...

RSS Feed

சமையல் எண்ணெயில் செத்து கிடந்த எலி : ஆலையில் 1000 லிட்டர் பறிமுதல்


ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் சமையல் எண்ணெயில் எலி செத்து கிடந்ததால், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆலையில் ஆய்வு செய்து, ஆயிரம் லிட்டர் எண்ணெயை பறிமுதல் செய்து, தயாரிப்பு  பணியை தற்காலிகமாக நிறுத்தினார்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல்(52). இவர், கடந்த 11ம் தேதி, ஆத்தூர் ராணிப்பேட்டையில் உள்ள கடை ஒன்றில் வீட்டிற்கு தேவையான சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்கியுள்ளார். நேற்று முன்தினம் சமையல் செய்யவதற்காக சமையல் எண்ணெயை எடுத்தபோது பாக்கெட்டினுள் குட்டி எலி செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் மாரியப்பன் நேற்று நேரடி விசாரணை நடத்தினார். இதில், ஆத்தூர் முள்ளுவாடி பகுதியில் செயல்பட்டு வரும் ஆலையில் இருந்து அந்த எண்ணெய் பாக்கெட் விற்பனைக்கு வந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த ஆலைக்கு சென்று நடத்திய ஆய்வில் உரிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், எண்ெணய் தயாரிக்குமிடம் மற்றும் பேக்கிங் செய்யுமிடம் சுகாதாரமின்றி காணப்பட்டதால் தயாரிப்பு, பேக்கிங் செய்ய தற்காலிக தடை விதித்து அதற்காக அறிக்கையினை ஆலை நிர்வாகிகளிடம் வழங்கினார். மேலும், சமையல் எண்ணையில் செத்த நிலையில் எலி கிடந்தது குறித்து, உரிய ஆய்வு செய்யப்பட்டு அதன்பேரில் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். இந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinakaran

Tags: